அச்சம் தவிர்!!

Acham_Thavir

காகிதம்  தான் தூய்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணல் ஆகாது

வண்ணங்களை கண்டு வெறுக்க கூடாது!

கல் தான் சுகமாக இருக்க வேண்டும் என்று எண்ணல் ஆகாது  

உழியை கண்டு முகம் சுளிக்க கூடாது!

நிலம் தான் சமமாக இருக்க வேண்டும் என்று எண்ணல் ஆகாது

உழவனின் காலடி கண்டு வருந்த கூடாது!

மனிதன் தான் வலி இல்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணல் ஆகாது

அன்பை கண்டு பயப்பட கூடாது!

-அர்த்

Leave a Reply

%d bloggers like this: